IMG_1012.JPG

Hi.

Welcome to my blog. I write about anything that interests me.

கொஞ்சம் தாமதம் தான், இருந்தாலும் தப்பில்லை. 2009 என்னவெல்லாம் செய்யவேண்டும் என்ற ஒரு அவா பட்டியல்.

  • பனிரெண்டு கிலோ குறைப்பு - 72 கிலோவுக்கு இந்த வருடம் முடியும் முன்பு அடையவேண்டும். முதுகுவலி மறுபடியும் ஹெர்னியா போன்ற தொல்லைகளில் இருந்து விடுபட இது தான் எளியவழி. அரிசி மற்றும் பால் சார்ந்த பொருட்களை முடிந்த வரை தவிர்க்க வேண்டும். கோதுமை, ராகி, சிவப்பு அரிசியினை அதிகம் சேர்த்து கொள்ளவேண்டும். அரைகுறை ஏரோபிக்ஸினை இனி அடிக்கடி செய்யவேண்டும்.
  • கடன் அட்டையினை விட்டொழித்தல் - கிரெடிட் கார்ட் ஒரு சிக்கலான வஸ்து. பயன்கள் பல இருந்தாலும் கொஞ்சம் அதிகம் கையைகடிக்கும் தன்மை உள்ளது. இப்போது தான் டெபிட் கார்ட் பயன்படுத்தியே இணையத்தில் அனைத்து பரிவர்த்தனைகளையும் செய்ய முடியுதே.
  • 20 புத்தகங்களை முழுவதுமாக படித்து முடிக்கவேண்டும் - விட்டகுறை தொட்ட குறையாக பல புத்தகங்களும், பக்கம் பிரிக்காமல் கிடக்கும் பல புத்தகங்கள் என பல கிடக்கின்றன. அவற்றில் உள்ள இருபது புத்தகங்களை முழுமையாக படிக்கவேண்டும். Unofficially 20in2009ல் பங்கேற்கவேண்டும்.
  • கன்னட மொழியினை கற்றுக்கொள்ள வேண்டும் - பெங்களூர் வாசம் ஐந்து வருடம் ஆகப்போகின்றது ஆனால் இன்னமும் பேடா-பேக்குவில் இருக்கும் என்னுடைய கன்னடத்தினை சரிசெய்ய வேண்டும்.
  • 50 தரமான விக்கிபீடியா கட்டுரைகளை உருவாக்குதல் (முன்பு போட்ட பட்டியலினை முடித்தல்) - கொஞ்ச நாட்களாக மனதில் இருந்த எண்ணம், நேற்று நான் பங்கேற்ற பெங்களூர் விக்கி பட்டறையின் மூலம் வலுவாகியுள்ளது.

பார்ப்போம் எப்படி தேறுகிறேன் என்று.

எஸ்.இளையராஜா - திராவிட பெண்கள்

சினிமாவும் நானும்