IMG_1012.JPG

Hi.

Welcome to my blog. I write about anything that interests me.

ஃபிலிம் 'நியூ'ஸ் - மிட்நைட் கவ்பாய்

'ஆய்த எழுத்து' படத்திற்கு அடுத்து நம் ஊடகங்கள் 'நியூ' படத்தினை திறனாய்வு மற்றும் பகுப்பாய்வு செய்ய போகிறார்கள். மேலும் கிரணின் கவர்ச்சிப் படத்தினை போட்டுவிட்டு இந்த படம் குப்பை, ஆபாசம், கலாசார சீரழிவு என்றெல்லாம் எழுதுவார்கள் என்று நினைக்கிறேன். நான் இங்கு சொல்ல வந்தது, நான் பார்த்த ஒரு பழைய படத்தினைப் பற்றி. 'மிட்நைட் கவ்பாய்' (Midnight Cowboy) என்ற படம், அஷ்விதா கலையகத்தின் புண்ணியத்தில் (ஓசியாக ;-) ) பார்க்க முடிந்தது. அடுத்த வாரம் கேஸப்ளாங்கா (Casablanca) .

படத்தின் பெயர் கேட்பதற்கு 'ஒரு மாதிரி' தான் இருந்தது. ஆஸ்கர் விருதினை ஜெயித்த படம் என்பதால் பார்க்க சென்றேன். படத்தின் பெயர்தான் 'ஒரு மாதிரி', படம் கொஞ்சம் 'நல்ல மாதிரி' தான் இருந்தது. ஜோ பக் (Jon Voight) என்பவன் டெக்ஸாஸில் வசிக்கும் ஒரு இளைஞன். அங்கு ஒரு உணவகத்தில் பாத்திரம் கழுவுபவனாக வேலை செய்கிறான். அவனுக்கு வேலை பிடிக்கவில்லை, ஆகவே நிறைய காசு பார்க்கும் ஆசையில் ஒரு விசித்திரமான தொழிலுக்காக நியூயார்க் வருகிறான். அந்த தொழில் - விலைமகனாக வேலை செய்வது. சற்றே அழகான உடல்வாகு கொண்டவன், நியூயார்க்கில் உள்ள பல பெண்கள் தகாத முறையில் பல் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசையாக இருப்பார்கள் என்ற மாயையில் , அவன் நியூயார்க் வருகிறான்.

ஜோவிற்கு டெக்ஸாஸில் சில சங்கடமான அனுபவங்களும் உண்டு. அவன் தாய் மற்றும் அவன் பாட்டி பல ஆண் துணைகளை வீட்டிற்கு அழைத்துவந்து அவர்களுடன் சந்தோஷமாக இருக்கிறார்கள். சிறுவனாகிய இவன் தனிமையில் வாடுகிறான். இவன் அப்போது ஒரு பெண்ணிடம் காதல் வயப்ப்டுகிறான். ஆனால் அவளோ டெக்ஸாஸில் உள்ள சில விடலைகளால் வன்புணர்ச்சிக்கு உள்ளாக்கபட்டு மனச்சிதைவுக்கு உள்ளாகிறாள். இந்த நிகழ்ச்சிகள் அவ்வபோது அவனுக்கு கெட்ட கனாவாக வந்து பயமுறுத்துகின்றன.

நியூயார்க்கில் அவனுக்கு ரட்ஸோ (Dustin Hoffman) என்பவனின் அறிமுகம் கிடைக்கிறது. ரட்ஸோவிற்கு ஒரு கால் ஊனம், ஆகையால் அவன் தத்தித் தத்தி நடப்பவன். மேலும் ரட்ஸோவிற்கு காசநோயினால், தொடர்ச்சியாக இருமல் வேறு. ரட்ஸோவிற்கு ஃப்ளோரிடா இடத்தின் மீது ஒரு மிகப்பெரிய ஈர்ப்பு. அங்கு மக்கள் வேலையே செய்யமாட்டார்கள், பெண்கள் எப்போதுமே கடற்கரையில் வெயில் காய்ந்து கொண்டு இருப்பார்கள் என்று அவனுக்கு ஒரு மாயை. அவனிடம் ஜோ தன் தொழில் பற்றி கூறி, வாடிக்கையாளர் ஏதாவது தெரியுமா என்று கேட்கிறான். முதல் முறை ரட்ஸோ, ஜோ விடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றிவிடுகிறான். பிறகு ஒரு சின்ன சண்டைக்குப் பிறகு இருவரும் நண்பர்கள் ஆகின்றனர். ரட்ஸோ தனக்கு தெரிந்த பல வித்தைகளை (பிக்பாக்கெட்) ஜோவிற்கு கத்துக்கொடுக்கிறான்.

இதற்கிடையில் ஜோவிற்கு ஒரு பெண் வாடிக்கையாளரின் 'போனி' வருகிறது. ஆனால் அந்த பெண்ணோ அவனிடம் பணம் கொடுக்காமல் அழுது ஆர்ப்பாட்டம் செய்து, ஜோவிடம் இருந்து டேக்ஸிக்கு பணம் வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறாள். (இந்த பெண் 20 நிமிடங்களுக்கும் குறைவாகத்தின் திரையில் வருவார், ஆனால் Best Supporting actressக்கான ஆஸ்காரினை வென்றிருக்கிறார்). இவ்வாறு லாபமே இல்லாமல் அவன் தொழில் சென்று கொண்டிருக்க, ஒரு நாள் அவனுக்கு 'போனி' நடக்கிறது. பணத்துடன் வீடு திரும்பும் போது, ரட்ஸோ நடுங்கிக் கொண்டு குளுரில் படுத்துக்கொண்டிருக்கிறான். ரட்ஸோ தற்செயலாக மாடிப்படிகட்டில் தடுக்கி கீழேவிழுந்து காயப் படுத்தியும் கொள்கிறான்.

மருத்துவரை அழைக்கச்சென்ற ஜோவினை தடுத்து நிறுத்தி தன்னை ஃப்ளோரிடா அழைத்துச் செல் என்று கூறுகிறான். இருவரும் பேருந்தில் ஃப்ளோரிடா செல்கின்றனர். வழியில் ஜோ, ரட்ஸோவினை கேலி செய்துகொண்டும், தனக்கு இந்த தொழில் பிடிக்கவில்லை வேறு நல்ல தொழில் பார்க்கப் போகிறேன் என்றும் கூறிக்கொண்டு வருகிறான். ஆனால் ரட்ஸோவோ இறந்துவிடுகிறான்.

1969ல் வந்த படம் இது. டஸ்டின் ஆஃப்மேனின் இரண்டாவது படம். இளைய வயதில், பார்ப்பதற்கு அல் பசினோ போல் இருக்கிறார். இந்தப் படத்திற்கு முதலில் X என்று ரேட் செய்துள்ளனர், பிறகு R என்று மாற்றியுள்ளனர். இது X ரேட்டின் போதே ஆஸ்கார் விருது ஜெயித்துள்ளது. இன்றுவரை ஆஸ்கார் ஜெயித்த ஒரே X ரேட்டட் படம் இதுதான்.

வினாடி - வினா

ஆய்த எழுத்து